‘தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 42 சுங்கச்சாவடி களையும் இன்று (அக். 4) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும்’ என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி கூறினார்.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட் டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். லாரி வாடகையில் டிடிஎஸ் பிடித்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
லாரி வேலைநிறுத்தப் போராட் டம் 4-ம் நாளாக தொடர்கிறது. போராட்டத்துக்கு 2 நாள் ஆதரவு தெரிவித்த கோழிப் பண்ணையாளர் கள் சங்கத்தினர், நேற்றுமுதல் முட்டைகளை அனுப்பத் தொடங்கியுள் ளனர். எனினும், லாரி உரிமையாளர்கள் தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர் வதால், தமிழகத்தில் பல நூறு கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கமடைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.நல்லத்தம்பி கூறும் போது: ‘நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத் தால், நேரடியாகவும், மறைமுகமாக வும் 50 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 நாட்களில் தமிழகத்தில் ரூ.10 ஆயிரம் கோடிஅளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட் டுள்ளது.
கார் போன்ற வாகனங்கள் ஆண்டுக்கு ஆயுள்கால வரியாக 10 முதல் 15 சதவீதம் வரை செலுத்துகிறது. எனினும், சுங்க வரி செலுத்தும் அவலநிலை, இந்தியாவில் மட்டுமே உள்ளது. இதனால் எங்கள் பிரச்சினையை எடுத்துக்கூறி மக்களை திரட்டி போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 42 சுங்கச்சாவடிகளையும் ஞாயிற் றுக்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.