சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து காரைக்காலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகிளா காங்கிரஸார். 
தமிழகம்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு; காரைக்காலில் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

வீ.தமிழன்பன்

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் ஆகியவற்றைக் கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், புதுச்சேரி மகிளா காங்கிரஸ் சார்பில் இன்று (டிச. 23) காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரேம் பஞ்சகாந்தி தலைமை வகித்தார்.

புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் துர்கா தாஸ், துணைத் தலைவர்கள் ஜெயலட்சுமி, பொன்னி, மாநில செயலாளர் சுஸான் மேரி, மாவட்டத் தலைவர் நிர்மலா, மாவட்ட செயலாளர் திலகவதி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT