தமிழகம்

‘புதிய வகை கரோனா வைரஸ் குறித்துமக்கள் அச்சப்படத் தேவையில்லை’- அமைச்சர் விஜயபாஸ்கர்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த 10 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 1,088 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் அண்டை மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

SCROLL FOR NEXT