‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அந்த வகையில், விழுப்புரத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வாழ்வோரைப் போலவே வாழும் நிலை தற்போது உள்ளது. கந்துவட்டி கொடுமையும் அரங்கேறி வருகிறது. வெள்ளைக்காரர்களை விட சிறந்த தலைவர்கள் வருவார்கள் என்று நம்பினேன். வந்தார்கள்; அவர்கள் கொள்ளைக்காரர்களாக மாறி விட்டார்கள்.
குறைகளைச் சொன்னால், ‘இந்தியாவில் முதல் மாநிலம்’ என்ற விருது வாங்கி இருக் கிறோமே! என்கிறார்கள். மற்ற ஊழல் மாநிலங்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு ‘முதல்மாநிலம்’ என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம். ஊழலில், மானுட உரிமைகளை மத்திய அரசி டம் விட்டுக் கொடுப்பதில், மாணவர்களை பெரும் தவிப்புக்கு உள்ளாகும் மாநிலங்க ளில், மணல் கொள்ளையில் முதலிடம் வகிக்கி றீர்கள். குறிப்பாக மணல் கொள்ளையை இந்த இடத்தில்தான் சொல்ல வேண்டும்.
‘நான் வருமான வரி கட்டினேனா!’ என்றுவருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரிக்கிறார்கள். சரியாக வரி கட்டியதற்காக பரிசு கொடுக்க, வருமான வரித்துறையே என்னை அழைத்தது. இதுதான் எனக்கானச் சான்று.
பெட்ரோலை நமக்கு, 84 ரூபாய்க்கு கொடுத்து விட்டு, பிற நாடுகளுக்கு 34 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள் இது எவ்வளவு பெரிய துரோகம்! கிழக்கிந்திய கம்பெனி போல ஆட்சி நடத்தும் இவர்கள் மேல் கோபம்வருகிறது. ‘வெள்ளையனே வெளியேறு’ என்றது போல, ‘கொள்ளையனே வெளியேறு’ என்ற கோஷம் தொடங்கி விட்டது.
‘பிரதமர், இன்று மாலை டிவியில் தோன்றுகிறார்’ என்றாலே குலை நடுங்கும் குடிமக்கள் நிலை,இதற்கு முன் ஜனநாயக வரலாற்றில் இருந்த தாக நினைவில் இல்லை. இங்கு எழுச்சி, புரட்சி எல்லாம் தொடங்கி விட்டது. அதைநீங்கள் முன்னின்று நடத்துங்கள். ஜனநாயகத் தில் என்னை பொறுத்தவரை மக்கள்தான் நாயகர்கள். நாங்கள் அவரின் சேவகர்கள். இவ்வாறு அவர் பேசினார். மாலையில் திருச்சிற்றம்பலம் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
தொழில் துறையில் பின் தங்கிய கடலூர்
தொடர்ந்து, கடலூரில் மக்கள் நீதி மய்யம் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில், கட்சித் தலைவர் கமல்ஹாசன்பங்கேற்றுப் பேசுகையில், “புயல் வெள்ளங்க ளால் கடலூர் மாவட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதைப் போக்கநிரந்தரமான திட்டம் எதுவும் இல்லை. கடலூர் கம்மியம் பேட்டையில் நகர குப்பைகள் கொட்டப்பட்டு மலையாக உள்ளது. மிக நீண்ட பெருமையைக் கொண்ட கடலூர் துறைமுகம் சாக்கடையின் சங்கமமாகமாறியுள்ளது தொழில்துறையில் முன்னேறி இருக்க வேண் டிய கடலூர் மாவட்டம் பின் தங்கியுள்ளது.” என்றார்.