காரைக்காலில் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள். 
தமிழகம்

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

வீ.தமிழன்பன்

காரைக்காலில் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் இன்று முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் காரைக்கால் பிரிவில், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் 42 பேர் பணியாற்றி வருகின்றனர். 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 6 மாத கால ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகப் பணிமனையில் இன்று (டிச.22) முதல் உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

காரைக்காலிலிருந்து இயக்கப்படும் 32 பேருந்துகளில், போராட்டம் காரணமாக, இன்று 9 பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT