தமிழகம்

சீன பட்டாசுக்கு எதிரான மனு மீது நடவடிக்கை எடுக்க வெடிமருந்து அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

சீன பட்டாசுகளுக்கு எதிரான மனுவை பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்கும்படி தலைமை வெடிமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவ காசியை சேர்ந்த கே.கே.சி. பாலகணேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

இந்தியாவில் பாதுகாப்பு நலன் கருதி அதிக ஆபத்துகள் நிறைந்த சீன பட்டாசுகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கெனவே அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சீன பட்டாசுகள் தொடர்பான அறிவிப் பாணை வெளியிடப்பட்டது.

இருப்பினும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் புழக்கத்தில் உள்ளன. எனவே, இந்தியாவில் சீன பட்டாசுகளை பறிமுதல் செய்யவும், தடை செய் யப்பட்ட சீன பட்டாசுகள் பயன்படுத் தப்படுவது தொடர்பாக சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண் டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்க றிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார். சீன பட்டாசுக்கு எதிராக மனுதாரர் 11.8.2015-ல் அளித்த மனுவைப் பரிசீலித்து தலைமை வெடிபொருள் கட்டுப் பாட்டு அதிகாரி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT