வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்கள் நிறுவனத்தில் செய்யப்படும் வைப்புத் தொகைகளுக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன. பொதுமக்களும் இத்தகைய நிறுவனங்களில் டெபாசிட் செய்கின்றனர்.
ஆனால், பல்வேறு நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்த பணத்தை திருப்பித் தராமல் கிடப்பில் போடுகின்றன. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு பல புகார்கள் சென்றன.
இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வசதியாக ரிசர்வ் வங்கி புதிய வசதியை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின், ‘சசேத்’ இணையப் பக்கத்தில், (https://sachet.rbi.org.in) இத்தகைய புகார்களை அளிக்கலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.