இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகளின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி சுதேசி மில் அருகே நேற்று முன்தினம் மாலை நடை பெற்றது. கம்யூனிஸ்ட்களின் பீகார் தேர்தல் வெற்றியை பறை சாற்றுவோம், புதுச்சேரியில் அரசியல் வியாபாரத்தை முறிய டித்து நேர்மை அரசியலை முன் னெடுத்திடுவோம் என்பதை முன்வைத்து பொதுக்கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் பங்கேற்க வந்தஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு விவசாயிகளின் மீது மூர்க்கத்தனமான ஒரு யுத் தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் மீது யுத்தத்தை தொடங்கிய காரணத்தினால் அதனை எதிர்த்து விவசாயிகள் போராட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு தனது மூர்க்கத்தனமான பிடிவாதத்தை கைவிட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின்சார திருத்த மசோதாவையும் திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் தொடர்வதை தவிர்க்க முடியாது. இந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக் கும். இதனால் ஏற்படுகின்ற அனைத்து விளைவுகளுக்கும் மத்திய மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டி வரும்.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங் கலாம். யார் வேண்டுமானாலும் பரப்புரை செய்யலாம். ஆனால் மக்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்ய முடிவெடுத்து விட்டார்கள். ஆகவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று தமிகத்தில் ஆட்சி அமையும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை என்றார்.
தேர்தல் சூதாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறும்போது, ‘‘எந்த தகுதியும் இல்லாத கட்சிபாஜக. புதுச்சேரி மற்றும் தமிழகத்திலேயே காலூன்ற முடியாத கட்சி.முதல்வர் வேட்பாளரை அறிவிப்பேன் என்று சொல்வது பைத்தியக் காரன் பேசும் பேச்சாக உள்ளது. நாம் கட்டும் வரிப்பணத்தை தான் பொங்கல் பணமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கரோனா காலத்தில் வேலையில் லாமல் கஷ்டப்பட்ட காலத்தில் மக் களுக்கு பணம் வழங்க வேண்டும் என அனைத்து கட்சிகள் கூறின. அப்போது வழங்காமல் இப்போது கொடுப்பது நல்ல நோக்கம் இல்லை. தேர்தலை மனதில் வைத்து சூதாடக் கூடிய ஒரு நோக்கம் தான் இது’’ என்று தெரிவித்தார்.