திருவண்ணாமலை அருகே விவசாயி குடும்பத்தினரை தாக்கி 10 பவுன் நகையை கொள்ளை டித்து சென்ற முகமூடி கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் விவசாயி ராஜா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் உள்ளனர். ராஜா தனது வீட்டில் குடும்பத்துடன் நேற்று முன்தினம் நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு ராஜா கண் விழித்து ஜன்னல் வழியாக பார்த்தபோது, 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் கற்களை கொண்டு கதவை உடைத்துக் கொண்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிலின் கீழே படுக்க வைத்துள்ளார்.
மேலும் அவர், செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் தெரிவிக்க முயன்றுள்ளார். அதற்குள், மர்ம நபர்கள் 7 பேரும், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்துவிட்டனர். இதையடுத்து, ராஜா அரிவாள்மனையை எடுத்து, அந்த கும்பலை சேர்ந்த ஒருவரின் கால் பகுதியில் வெட்டியுள்ளார். மேலும், மர்ம நபர்கள் மீது ராஜாவின் மனைவி மிளகாய் பொடியை தூவியுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், இரும்பு ராடு மூலம் ராஜாவை தாக்கியுள்ளனர்.
மேலும், பிள்ளைகளின்கழுத்தில் கத்தியை வைத்து, பணம் மற்றும் நகைகளை கேட்டு மிரட்டியுள்ளனர். பிள்ளைகளை காப் பாற்ற, தனது கழுத்தில் அணிந்தி ருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த நகை என மொத்தம் 10 பவுன் நகை, 400 கிராம் வெள்ளி, 25 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகிய வற்றை ராஜாவின் மனைவி கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ராஜா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு அறையில் தள்ளி பூட்டிய மர்ம நபர்கள் தடயங்களை அழிப்பதற்காக வீட்டில் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது, அவர்கள் ராஜாவிடம் பறித்துச்சென்ற செல்போனை, விவசாய நிலத்தில் வீசியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
இது குறித்து தண்டராம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி கொள் ளையர்களை தேடி வருகின்றனர்.