தமிழகம்

6 மாதத்தில் ஓய்வு பெறுபவர்கள் உட்பட தேர்தல் பணிக்கான அதிகாரிகள் நியமனம் குறித்து விளக்கம்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

செய்திப்பிரிவு

பணியில் இருந்து 6 மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களை தேர்தல் பணியில் நியமிக்கக் கூடாது என்பது உட்பட தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமைச் செயலர்கள், தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை தெரிவித் துள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதேபோல், புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதியும் கேரளாவில் ஜூன் 1-ம் தேதியும் மேற்கு வங்கத்தில் மே 30-ம் தேதியும் அசாமில் மே 31-ம்தேதியும் சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிவடைகின்றன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக தற்போது தேர்தல் ஆணைய குழுவினர் 5 மாநிலங்களுக்கும் சென்று, முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கின்றனர். அந்த வகையில் தமிழகத்துக்கு நாளை வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது,அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல்ஆணையம் அந்தந்த மாநிலங்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது.

அந்த அறிவுறுத்தல்களை சுட்டிக்காட்டி, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட5 மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் மற்றும் தலைமைதேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணைய மூத்த முதன்மை செயலாளர் நரேந்திரா என்.படோலியா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைவதை முன்னிட்டு, பொதுத்தேர்தல் நடத் தப்பட உள்ளது.

நியாயமாகவும் வெளிப்படை யாகவும் இப்பகுதிகளில் பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகள் தொடர்பான சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை அவர்கள் சொந்த மாவட்டங்களில் நியமிக்கக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவராகவோ அல்லது 3 ஆண்டுகளை அடுத்த ஆண்டு மே 31-ம் தேதி நிறைவு செய்பவராகவோ இருக்கக் கூடாது.

முந்தைய தேர்தல்கள் அல்லதுதேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டபோது ஏதேனும் காரணங்களுக்காக தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலோ, வரும் 6மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவராக இருந்தாலோ அவரை தேர்தல் தொடர்பான எந்த பணியிலும் நியமிக்கக் கூடாது.

இருப்பினும், கடந்த 2019-ம்ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த இடமாற்றம் தொடர்பான கொள்கை பின்பற்றப் படாது.

தேர்தல் ஆணையத்தின் இந்தஉத்தரவை கண்டிப்பாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT