பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என பாஜக மாநில தலைவர் முருகனுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்பி அன்வர் ராஜா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளர் குறித்த பாஜக தமிழக தலைவர் எல்.முருகனின் கருத்து தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மத்திய அமைச்சர் அமித்ஷாவே முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்ட பிறகு முருகனின் பேச்சை பொருட்படுத்த வேண்டியதில்லை’’ என்றார்.
மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, ‘‘ அதிமுகவை பொறுத்தவரை பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர். அவரை ஏற்றுக் கொள்பவர்களுடன் மட்டுமே கூட்டணி வைப்போம். பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது எல்.முருகன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் அவர் ஏன் இப்படி கூறினார் என தெரியாது’’ என்றார்.
முன்னாள் எம்பி அன்வர் ராஜா கூறும்போது,‘‘ முதல்வர் பழனிசாமியை பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணியில் இருக்க முடியும். இல்லாவிட்டால் பாஜக தனியாகதான் போட்டியிட வேண்டும்’’ என்றார்.