நீலகிரி மாவட்டம் கோடநாடு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் நேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலமாக வந்த அவர், அங்கிருந்து ஹெலி காப்டரில் கோடநாடுக்கு பகல் 1 மணியளவில் வந்தார். 18 மாதங் களுக்குப் பிறகு ஜெயலலிதா கோடநாடு வந்திருப்பதால், நீலகிரி மாவட்ட அதிமுகவினர் உற்சாக மடைந்துள்ளனர். அலங்கார தோர ணங்கள், வர வேற்பு வளைவுகள், ஆடல், பாடல் என முதல்வரை வரவேற்றனர்.
நீலகிரி மாவட்டச் செயலாளரும், கே.ஆர்.அர்ஜுணன், எம்.பிக்கள் சி.கோபாலகிருஷ்ணன், ஏ.கே.செல்வராஜ், எம்எல்ஏக்கள் புத்தி சந்திரன், கருப்புசாமி, மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், மேற்கு மண்டல ஐ.ஜி. சங்கர், டி.ஐ.ஜி. அமீத்குமார் உள்ளிட்டோர் மலர் க்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வர் ஜெயலலிதா கோடநாட்டில் சில வாரங்கள் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.