கடலூர் சுற்றுலா மாளிகையில் தேங்கிய மழைநீரை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பொதுப்பணித் துறையினர். 
தமிழகம்

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை: 3 நாட்கள் தொடர்ந்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேக்கம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக பெய்து வரும் கனமழை யால் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த16-ம் தேதி இரவு முதல் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையில், மீண்டும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடலூரில் 10 செ.மீ, சேத்தியா த்தோப்பு 8 செ.மீ, புவனகிரியில் 7 செ.மீ மழை பதிவாகியது.

தொடர் மழை காரணமாக கடலூர் நகரப் பகுதியில் குடியிருப்புப் பகுதிகளிலும், அரசு அலுவலகப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நேற்று முன்தினம் முதல் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று காலை பொக்லைன் இயந்திரம் கொண்டு மழைநீரை வெளியேற்றினர். அதேபோன்று கூத்தப்பாக்கம் பகுதியிலும் மழைநீர் தேங்கியது.

ஏற்கெனவே பெய்த மழையினால் நீர் நிலைகள் நிரம்பியிருக் கும் நிலையில், தற்போது பெய்த மழைநீர் தேங்க வழியில்லாதாதல், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல இடங் களில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. வாகனங்கள் தடுமாற்றத்துடனே சாலையில் பயணிக்கின்றன.

SCROLL FOR NEXT