தமிழகம்

மனைவியை கொன்றுவிட்டு இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்தது ஏன்? - போலீஸ் விசாரணையில் புது தகவல்

செய்திப்பிரிவு

வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்ல முடியாதே என்ற மன உளைச்சலில் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள் பாண்டி யன் மனைவியைக் கொன்று தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.

மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளராக இருந்தவர் பெருமாள் பாண்டியன் (50). இவர் ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்று கைதான வழக்கில் டிச.14-ல் நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இதையடுத்து பெருமாள் பாண்டியன் ஜாமீன் பெற்று மேல்முறையீடு செய்யத் திட்ட மிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரு மகன்களில் மூத்த மகன் வெளியே சென்றிருந்த நிலையில் ஆசிரியையான அவரது மனைவி உமா மீனாவை கொன்றுவிட்டு பெருமாள் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரது உடல்களும் சொந்த ஊரான தேனி மாவட்டம், வடுக பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களால் அடக்கம் செய்ய ப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

பெருமாள்பாண்டியன் லஞ்சம் நேரடியாக வாங்கவில்லை என்றாலும், ரூ.1.20 லட்சத்தைக் கொண்டு வந்தவர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கினார். ஆனால், ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் கேட்டதன் பேரில் கொண்டு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததால் வேறு வழியின்றி சிக்கிக்கொண்டார்.

வழக்கு தொடர்பாக தொடக்கத்தில் மூத்த வழக்க றிஞர் ஒருவரை நியமித்த பெருமாள்பாண்டியன், கருத்து வேறுபாட்டால் வழக்கறிஞர் இன்றி தானே நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க மனைவி வலியுறுத்தியும் மறுத்துவிட்டார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தக ராறு ஏற்பட்டது.

10 ஆண்டுகளாக வழக்கு நீடித்த நிலையில், வேலைக்குப் போக முடியவில்லையே என்ற மனக் குழப்பத்தால் மருத் துவரிடம் சிகிச்சை பெற்றார். குடிப்பழக்கத்துக்கும் அடிமை யானார். இதையடுத்து மறுவாழ்வு மையத்தில் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 3 ஆண்டு சிறைத் தண்டனையை மேல் முறையீடு செய்து வழக்கை முடிக்க முயற்சிக்கலாம் என மகன்களும் ஆறுதல் தெரிவித் தனர்.

ஆனாலும், வழக்கில் தோல்வி, வேலைக்குப் போக முடியாதே என்ற மன உளைச்சலுக்குத் தள் ளப்பட்டார். இதனால் மனமு டைந்த அவர் மனைவியைக் கொன்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு கூறி னர்.

SCROLL FOR NEXT