சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதல் வர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதி யில் இருந்து பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார். அதிமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகி களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது, அதிமுக அர சின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மாவட்டம் முழு வதும் பூத் கமிட்டி அமைத்து, தேர்தல் பணி யாற்ற நடவடிக்கை எடுப் பது உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி விரிவாக ஆலோசித்தார்.
கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் முதல் வர் பழனிசாமி கூறிய தாவது:
சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வரமுடியாத நிலை ஏற்படும். எனவே, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்டுக்கொண்டபடி, எனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய சோரகை சென்றாயபெருமாள் கோயிலில் ஆண்டவனை பிரார்த்தனை செய்துவிட்டு, நாளை (இன்று) தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.
எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். எடப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மினி கிளினிக் தொடக்க விழாவில் பங்கேற்கிறேன்.
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுடனான கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடர்வதை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவே கூறிச் சென்றுள்ளார். புதிதாக வந்துள்ள பாஜக மாநிலத் தலைவரின் கருத்து ஏற்புடையதல்ல.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தேவையான நிலத்தை சட்ட திட்டப்படி மத்திய அரசிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் எய்ம்ஸ் மருத் துவமனைக்கு தேவை யான நிலத்தை, மாநில அரசிடம் இருந்து இன்னும் வந்து வாங்காமல் இருக் கின்றனர். கரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத் துவமனை நிலத்தை மத்திய அரசு அதிகாரிகள் வந்து பெற்றுக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை சரியாகிவிட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேவையான நிலத்தை மத்திய அரசிடம் மாநில அரசு ஒப்படைத்துவிடும்.
லாரிகளில் பொருத்தக்கூடிய ஜிபிஎஸ் கருவியை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் தான் வாங்க வேண்டும் என்று யாரை யும் நிர்பந்திக்கவில்லை. இதுபற்றி போக்கு வரத்துத் துறை அமைச்சர் தேவையான விளக்கத்தை அளித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதால் மக்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு, விலையை குறைக்க வேண்டி, மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் கூறினார்.