ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய ஜன நாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் கண்டனம் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், போர்க்குற்றங்கள் குறித்து இலங் கையே விசாரணை நடத்தும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இதனை இந்தியா ஆதரிப்பது கண்டனத்துக்குரியது. இது இலங்கை உள்நாட்டுப் போரை ஆதரிப்பதற்கு சமமானதாகும். இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை உலக நாடுகளுக்கு எடுத்துக்கூறி ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.