தமிழகம்

பெட்ரோலிய செயல்பாடுகளை காவிரி டெல்டா பகுதிகளில் தடை செய்ய வேண்டும்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய ராமன் விடுத்துள்ள அறிக்கை:

காவிரிப் படுகையில் நிலக்கரி, மீத்தேன் எடுக்க எந்த அனுமதி யும் வழங்கப்படாது என்ற அரசாணையை வெளியிட்டதன் மூலம் தமிழக அரசு தனது வரலாற்றுக் கடமையை நிறை வேற்றி உள்ளது.

எனினும், 2013-ல் முதல்வர் அளித்த உறுதிமொழியையும், தமிழக அரசின் தடையையும் மீறி, ஷேல் காஸ், மீத்தேன் எடுப்பதற்கான முயற்சிகளை ஓஎன்ஜிசி தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கான குழாய் களைப் பதிக்க, ராட்சத இயந்திரங் களை வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவந்துள்ளது.

ஓஎன்ஜிசி பயன்படுத்தும் ரசாயனங்களால் விவசாயம், குடிநீர், சுற்றுப்புறச் சூழல், உணவு உறுதிப்பாடு கெட்டுப்போவதுடன், காவிரிப் படுகை முழுவதுமே மனிதர்கள் வசிக்க இயலாத பகுதியாக மாறிவிடும்.

எனவே, ஓஎன்ஜிசியின் குழாய் பதிப்பு பணிகளை காவிரிப் படுகை மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக உடனடியாக தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், காவிரிப் படுகையில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு பணிகளையும் முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும். காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT