சஞ்சீப் பானர்ஜி 
தமிழகம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி, டிசம்பர் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற வுள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலிஜியம், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளசஞ்சீப் பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது புதியதலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த 1961-ல் பிறந்த சஞ்சீப்பானர்ஜி, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த பின் 1990-ல் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். கடந்த 2006- ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார்.

ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதேபோல, சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது மூத்தநீதிபதியாக உள்ள வினீத் கோத்தாரியை குஜராத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

SCROLL FOR NEXT