ரஜினி கட்சி தொடங்கினாலும் எங்களுக்குப் பாதிப்பில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் மகன் நடிகர் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசியதாவது: தற்போது அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக உள் ளது. தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி தேமுதிகதான். மூன்றாவது அணி என ஒன்று அமைந்தால், அது எங்கள் தலைமையில்தான் அமையும். நடிகர் ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படி அவர் தொடங்கினாலும் எங்களுக்குப் பாதிப்பில்லை என்றார். இக்கூட்டத்தில் தேமுதிக சட்டப் பேரவைத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.