தமிழகம்

நீர்மட்டம் 140.80 அடியாக உயர்வு: நிரம்பும் தருவாயில் பாபநாசம் அணை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் மழை நீடிக்கிறது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 37, சேர்வலாறு- 33, மணிமுத்தாறு- 30, நம்பியாறு- 7, கொடுமுடியாறு- 10, அம்பாசமுத்திரம்- 21, சேரன்மகாதேவி- 29.20, நாங்குநேரி- 6, பாளையங்கோட்டை- 16, ராதாபுரம்- 6, திருநெல்வேலி- 10.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 140.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரித்தால் ஓரிரு நாளில் பாபநாசம் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணை நிரம்பினால் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது.

156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டமும் 148.95 அடியாக உயர்ந்திருக்கிறது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 534 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குபச்சையாறு அணை நீர்மட்டம் 25 அடியாகவும், 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 10.62 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 27.50 அடியாகவும் இருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின்றி காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகரித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கருப்பாநதி அணையில் 14 மி.மீ., சிவகிரியில் 11 மி.மீ., சங்கரன்கோவிலில் 8 மி.மீ., ஆய்க்குடியில் 6.40 மி.மீ., அடவிநயினார் அணையில் 6 மி.மீ., கடனாநதி அணை, ராமநதி அணையில் தலா 5 மி.மீ., குண்டாறு அணை, தென்காசியில் தலா 3 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணை நீர்மட்டம் 83.50 அடியாகவும் , ராமநதி அணை நீர்மட்டம் 79 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.76 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89.25 அடியாகவும் இருந்தது.

SCROLL FOR NEXT