குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை ஏரியின் கரை உடைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து வெளியேறும் தண்ணீர். 
தமிழகம்

குடியாத்தம் அருகே மர்ம நபர்களால் ஏரிக்கரை உடைப்பு: விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

செய்திப்பிரிவு

குடியாத்தம் அருகே ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறி அருகாமையில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்துக்கு உட்பட்ட தட்டாங் குட்டை பகுதியில் உள்ள ஏரி 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட இந்த ஏரி சமீபத்தில் பெய்த கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது.

தட்டாங்குட்டை ஏரி நிரம்பி தண்ணீர் கோடிப்போனதால், அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலை யில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மேடான பகுதியில் உள்ள கரையை உடைத்துள்ளனர்.

இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகேயுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர் வகைகள் சேதமடைந்துவிட்டதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள் ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறும்போது, "பல ஆண்டுகளாக தட்டாங்குட்டை ஏரியை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந் தனர். சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது. இதைக் கண்ட ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் மேடான பகுதியை இரவோடு, இரவாக உடைத்துள் ளனர்.

இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் ஏரிக் கரையையொட்டியுள்ள விவசாய நிலங்களில் சூழ்ந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமாகின.

எனவே, ஏரிக்கரையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தண்ணீரால் மூழ்கிய பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT