செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் அமைந்துள்ள மல்லிகேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத 5-வது சோமவாரத்தை ஒட்டி, 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
கோயில் வளாகத்தில் சிறப்பு கலசங்கள் அமைத்து வேள்வி மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், 108 சங்குகளை கொண்டு சிவலிங்கம் உருவம் அமைக்கப்பட்டது. இவற்றின் மூலம், அர்ச்சகர்கள் மூலவருக்கு சங்காபிஷேகம் செய்தனர். பின்னர், மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.