தமிழகம்

ஆலந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிமுக செய்திக் குறிப்பில்: "அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட ஆலந்தூர் நகரக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுத்த நிறுத்தப்படுகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த டிசம்பர் 10-ம் தேதி ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஆலந்தூர் தொகுதிக்கு ஏப்ரல் 24-ல் வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் (நேற்று) புதன் கிழமை அறிவித்தது.

SCROLL FOR NEXT