தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ரூ.30 லட்சம்கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 37 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ள 17 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 10, 11-ம் தேதிகளில் திடீர் சோதனை நடத்தினர். போலீஸாரின் சோதனைச் சாவடிகள் மற்றும் பிற மாநில எல்லைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவையும் மாநில எல்லைகளில் இருக்கும். இங்கு லஞ்சஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். இதில், விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.24 லட்சம் கைப்பற்றப்பட்டன.
சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர்,நெல்லை மாவட்டம் புளியரை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, விழுப்புரம் மாவட்டம் வானூர், கோவை திருமலையம்பாளையம், தேனி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடி, பாகலூர் சோதனைச் சாவடி என 17 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்தனர்.
அங்கு பணியில் இருந்த 37 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.