கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று நீராடத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள். 
தமிழகம்

கரோனா தளர்வால் 265 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் அக்னி தீர்த்தத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் ஓரளவு குறைந்துள்ளது. இதையடுத்து, 265 நாட்களுக்குப் பிறகு, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நேற்று பக்தர்கள் நீராட அனு மதிக்கப்பட்டனர். ஆனால், ராமநாத சுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் ஊரடங்கால் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் செப்.1 முதல் அனுமதிக்கப்பட்டனர். ராமேசுவரம் கோயிலிலும் பக் தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனு மதிக்கப்பட்டனர். ஆனால், அக்னி தீர்த்தக் கடலிலும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராட பக்தர்களுக்குத் தடை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, கார்த்திகை அமா வாசையை முன்னிட்டு நேற்று அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னித் தீர்த்தக் கடற் கரையில் நீராடினர். ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

பின்னர், கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT