தமிழகம்

தமிழக அரசு செயல்பாடு மிகவும் மோசம்: விஜயகாந்த் கருத்து

செய்திப்பிரிவு

தமிழக அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் பேசினார். அப்போது தமிழக அரசு மீது புகார் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ''தமிழக அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. தேர்தலை மனதில் வைத்தே தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சாலைகள் மிக மோசமாக உள்ளன.

நடிகர் சங்கத் தேர்தலில் நல்லவர்களுக்கே எனது ஆதரவு'' என்று விஜயகாந்த் பேசினார்.

SCROLL FOR NEXT