தமிழகம்

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்; தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடந்தது: ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இதில் தேர்தல் பணிகள் குறித்துப் பேசப்பட்டதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக சார்பில் இன்று வெளியிட்ட செய்தி வெளியீடு:

“அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், அதிமுக தலைமைக் அலுவலகத்தில் இன்று மாலை (14.12.2020 - திங்கட் கிழமை), ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டம், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும், ஹாண்ட் சானிடைசர் (Hand Sanitize)பயன்படுத்தப்பட்டும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் நடைபெற்றது''.

இவ்வாறு அதிமுக தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT