சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அமைப்பினர். 
தமிழகம்

சிவகங்கையில் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு

இ.ஜெகநாதன்

சிவகங்கையில் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள், போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வேளாண்மை தொடர்பான 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுடெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சியினர், விவசாயிகள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூ., முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்டச் செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் பல்வேறு விவசாயிகள் அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மதிமுக மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், காங்., மாவட்டத் தலைவர் சத்யமூர்த்தி, இந்திய கம்யூ., மாவட்டச் செயலாளர் கண்ணகி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஜெயராமன், மோகன், கண்ணன், சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்திற்கு அனுமதியில்லாதததால் அனைவரையும் கலைந்து போகுமாறு போலீஸார் வற்புறுத்தினர்.

ஆனால் கலைய மறுத்தததால், அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் போலீஸாருக்கும், விவசாய அமைப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT