அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்த சலுப்பை கிராமத்தில் உள்ள அழகர் கோயிலின் யானை சிலை பாதுகாக்கப்பட்ட புராதன சின் னமாக தமிழக அரசால் கடந்த 11-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானை சிலையை சுற்றி சுவர்கள் அமைத்து அதை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்த சலுப்பை கிராமத்தில் அமைந்துள்ளது அழகர் கோயில். இந்த கோயிலில் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து அதில் வெற்றி பெற்றதன் நினை வாக அங்கிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும், இந்த கோயிலின் எதிரே 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட மிகப் பிரம்மாண்டமான யானை சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட கலவை யினால் சுட்ட செங்கற்கள் மூலம் உருவாக்கப்பட்டது. யானை சிலை யின் கழுத்து மற்றும் உடலின் இரு புறங்களிலும் மணிகளால் அலங்க ரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
இக்கோயிலின் அருகில் இருந்த பலா தோப்பிலிருந்து பலாப்பழத்தை திருடிய திருடனை பிடிக்க இக்கோயிலில் இருந்த நாய் துரத்திய போது, திருடனை யானை ஒன்று மடக்கிப் பிடிக்க உதவியது எனவும், அதனால் யானையின் துதிக்கையில் பலாப் பழத்துடன் மனிதன் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது என்று இந்த சிலை குறித்து இப்பகுதியினர் கதையாக சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், சிறப்பு வாய்ந்த இந்த யானை சிலையை பாதுகாக் கப்பட்ட புராதன சின்னமாக தமிழக அரசு அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
“இந்த யானை சிலையை பார்க்க பல்வேறு நாடுகளிலி ருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த யானை சிலையை சுற்றி தற்காலிகமாக கம்பி வேலி மட்டுமே போடப் பட்டுள்ளது.
எனவே, சிலையின் பாது காப்பை உறுதிப்படுத்தும் வகையில், சிலை அமைந்துள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதி களான குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்” என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர்.