கரோனா தாக்கம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அரசு அனுமதி அளிக்கும் எனக் கூறப்படுகிறது. போட்டியை நடத்த அனுமதி கோரி தமிழக முதல்வரை, வீர விளையாட்டு அமைப்பினர் சந்திக்க உள்ளனர்.
தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முக்கி யமானது.
போட்டிகளைக் காண உள்ளூர் பார்வையாளர்கள் முதல் உலக சுற்றுலாப் பயணிகள் வரை வரு வார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டபோது அதை நீக்கக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசலில் தொடங்கிய போராட்டம், கன்னியாகுமரி முதல் மெரினா கடற்கரை வரை வரலாறு காணாத போராட்டமாக மாறியது.
அதற்கு மையப்புள்ளியாக மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கிராம மக்கள் இருந்தனர். இதையடுத்து அதிமுக அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டுச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து தற்போது தடையில்லாமல் போட்டி நடந்து வருகிறது.
இதற்கிடையே, கரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்ட நிலையில், பொங் கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டுப் போட்டிக்கு அனுமதி வழங்கலாமா? என தமிழக அரசு ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது.
கட்டுக்குள் இருக்கும் கரோனா தொற்றைக் காரணமாகக் கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பார்கள் என்பதால் அரசு வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி வழங்கும் என கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதற்கிடையே, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தற்போதே தங்கள் காளைகளைத் தயார் செய்து வருகின்றனர். மாடுபிடி வீரர்களும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழா அமைப்பாளர்களும் போட்டிகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைத் தொடங்கியுள் ளனர்.
ஆனால், அரசுத் தரப் பில் இருந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்கான எந்தத் தகவலும் இதுவரை வரவி ல்லை. சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருப்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நிறுத்தினால் அது ஆளும்கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக் கட்டை நடத்த அனுமதிக்க வாய்ப் புள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘தற்போது கரோனா தாக்கம் குறைந்துவிட்டது. உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மீட்ட ஜல்லிக்கட்டை தடை செய் யக்கூடாது என்று முதல்வரை அடுத்த வாரம் சந்தித்து முறையிட உள்ளோம். ஜல்லிக்கட்டுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம்தான் இருக்கிறது.
போட்டி ஏற்பாடுகளை தற் போது தொடங்கினால்தான் சரி யாக இருக்கும். ஆனால், அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்று தெரியவில்லை, ’’ என்றார்.