விபத்து நிகழ்ந்த இடம். 
தமிழகம்

தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் இருந்து சிமென்ட் மூட்டை பாரம் ஏற்றிய லாரி ஒன்று தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கி இன்று (டிச.12) சென்று கொண்டிருந்தது. பிற்பகலில் தொப்பூர் கணவாய் பகுதியில் பயணித்தபோது அந்த லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்தது.

தொப்பூர் அருகே சிறிய விபத்து நடந்ததால் அந்தச் சாலையில் ரெட்டைப் பாலம் பகுதியில் வாகனங்கள் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், பிரேக் பழுதடைந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள், சிறிய சரக்கு வாகனங்கள் என 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் வேறு வேறு கார்களில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தால் 2 மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் சென்று பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT