தமிழகம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு முதல் கோமதிபுரம் வரை சிவகங்கை சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலம்: பிரம்மாண்டமாக அமைக்க நெடுஞ்சாலைத் துறை ஆய்வு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பு முதல் மேலமடை வழியாக கோமதிபுரம் வரை 2 கி.மீ., தொலைவுக்கு ரூ.300 கோடியில் பிரம்மாண்டமாக பறக்கும் பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்ட மிட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையம் மற்றும் அரசு மருத்துவமனையிலிருந்து பாண்டிகோயில் சுற்றுச்சாலை சந் திப்பை அடைய சிவகங்கை சாலை வழியாகவே செல்ல முடியும் என் பதால் இச்சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் அதிகம். இந்த சாலையில் அப்போலோ மருத்துவமனை வழியாக அண்ணா நகர் செல்லும் லேக் வியூ சாலை, கே.கே.நகர் 80 அடி சாலை ஆகி யவையும் குறுக்காக கடந்து செல் கின்றன.

சிவகங்கை சாலையில் எந்த மேம்பாலமும் இல்லாததால் ஆட்சியர் அலுவலக சந்திப்பு, ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு ஆகிய மூன்று சிக்னல்களை குறுகிய தூரத்தில் வாகனங்கள் கடக்க வேண்டி உள்ளது. இதேபோல் மேலமடை சந்திப்பில் உள்ள லேக்வியூ சாலையிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சிவகங்கை சாலையின் நெரிசலுக்கு தீர்வு காண, மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பிலிருந்து மேலமடை சிக்னலை கடந்து பாண்டி கோயில் ரிங்ரோடு செல்லும் சாலையில் கோமதிபுரம் வரை 2 கி.மீ., தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த 2 மாதமாக இச்சாலையில் எந்தெந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலையை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண் டுள்ளனர். தற்போது ஆய்வின் முடிவில் ரூ.300 கோடி மதிப்பில் பறக்கும் பாலம் அமைக்கலாம் என திட்டம் தயாரித்துள்ளனர். இத்திட்டத்தை அரசு ஒப்புதலுக்காக மாவட்ட நெடுஞ் சாலைத்துறை விரைவில் அனுப்ப உள்ளது. ஒப்புதல் வழங்கியதும், உறுதியான திட்ட மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போதுதான் இந்த திட்டத்துக்கான ஆய்வு நடக்கிறது. விரைவில் இறுதி வடிவம் பெறும். திட்டமிட்டபடி பறக்கும் பாலம் அமைந்தால் அண் ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை சந்திப்பு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். மிக எளிதாக இச்சாலையை கடக்க முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT