அண்ணாமலை உச்சியில் இருந்து கோயிலுக்கு கொண்டு வரப்படும் மகா தீபக் கொப்பரை. 
தமிழகம்

2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் இருந்து அண்ணாமலையார் கோயிலை வந்தடைந்தது மகா தீப கொப்பரை

செய்திப்பிரிவு

2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்தநவம்பர் 17-ம் தேதி தொடங்கி கடந்த 3-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தீபத் திருவிழாவை யொட்டி, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் கடந்த மாதம் 29-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

ஜோதி பிழம்பாய் தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலையார் காட்சி அளித்தார். இதையடுத்து, அண்ணாமலை உச்சியில் இருந்து மகா தீபக் கொப்பரை, அண்ணாமலையார் கோயிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர், கொப்பரைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மகா தீபக் கொப்பரையில் உள்ள ‘கரு மை’ சேகரிக்கப்பட்டு, ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு சார்த்தப்படும். அதன் பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

குபேர கிரிவலம் வர தடை

இந்நிலையில் திருவண்ணாமலையில் வரும் 13-ம் தேதிகுபேர கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.அன்றைய தினம், குபேரலிங்கத்துக்கு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மூலம் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள் ளார்.

SCROLL FOR NEXT