தமிழகம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கி.மகாராஜன்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் இன்று (டிச.10) ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் 19-ல் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இதில் பால்துரை என்பவர் கரோனாவால் உயிரிழந்தார். ஸ்ரீதர் உட்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு மதுரை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் விசாரணை மதுரை நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி வடிவேல் முன்பு கடந்த 11 (நவ.11) தொடங்கியது. அப்போது, 9 பேருக்கும் 2027 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் விசாரணை டிச. 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT