தமிழகம்

புதுச்சேரி காங்கிரஸில் தொகுதியை இரண்டாக பிரித்து நிர்வாகிகள் நியமனம் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு - தொண்டர்கள் விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி காங்கிரஸில் தொகுதியை இரண்டாக பிரித்து நிர்வாகிகளை நியமிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை தொண்டர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்குவதால் கட்சியினர் அதிருப்தியை சமாளிக்க கட்சிக்குள் புதிதாக பதவிகள் உருவாக்கப்பட்டு நியமிக்கப் படுவது வழக்கம்.

புதுச்சேரியில் ஏற்கெனவேதிமுக தெற்கு, வடக்கு எனவும்,காரைக்கால் எனவும் பிரிக்கப் பட்டது. சமீபத்தில் அதிமுகவில் கிழக்கு, மேற்கு என மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது.

இதேபோல காங்கிரஸ் கட்சியில் தொகுதிகளை இரண்டாக பிரிக்கும் பணி தொடங்கியது.

தொகுதிகளை இரண்டாக்கி அதிலுள்ள வார்டுகளை பிரித்து, அதற்கு தனியாக தலைவர், துணைத்தலைவர், நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

முதற்கட்டமாக காரைக்கால் தெற்கு, உருளையன்பேட்டை, திருபுவனை, கதிர்காமம் ஆகிய தொகுதிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த தொகுதிகள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இல்லாத தொகுதிகளாகும். தற்போது. காங்கிரஸ் எம்எல் ஏக்கள் உள்ள தொகுதியை பிரிக்க முயற்சித்தபோது எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.

"தேர்தல் நேரத்தில் தொகுதியை பிரிப்பது கட்சி நிர்வாகிகளிடையே மோதலை ஏற்படுத்தும். பதவிகிடைக்காதவர்களுக்கு அதிருப் தியை ஏற்படுத்தும். எனவே தொகுதிகளை தேர்தலுக்குப் பிறகு பிரிக்கலாம். தற்போதுள்ள இதேநிலை நீடிக்க வேண்டும்" என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.

தொண்டர்கள் தரப்போ, "ஆட்சி பொறுப்பேற்றும் கடந்த நான்கே முக்கால் வருடங்களில் கட்சி பணியாற்றியோருக்கு பதவி ஏதும் தரவில்லை. உதாரணமாக, புதுவை மாநில காங்கிரஸ் கட்சிசார்பில் சோனியாகாந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் பலரேஇந்நிகழ்வுகளில் பங்கேற் கவில்லை. நிர்வாகிகளிலும் குறிப்பிட்டோரே பங்கேற்றனர். கட்சித்தலைமை இதை கண்டுகொள்வதே இல்லை. தற்போது எங்களுக்கு பதவி அளித்தால், அதை அவர்கள் எதிர்க்கிறார்கள்" என்று விமர்சிக்கின்றனர்.

SCROLL FOR NEXT