“யுவராஜ், சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தது தொடர்பாக அவர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவை சிபிசிஐடி போலீஸார் ஏற்கவில்லை. சரண் அடைந்தது தொடர்பாக எவ்வித அத்தாட்சியும் போலீஸார் வழங்கவில்லை” என யுவராஜின் வழக்கறிஞர் பழ.ஆனந்த் தெரிவித்தார்.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் நேற்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
யுவராஜ் சரணடைந்தது தொடர் பாக சிபிசிஐடி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜின் வழக்கறிஞர் பழ.ஆனந்த் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், சிபிசிஐடி அலுவலகத்தில் சரண டைவதற்கான மனுவை கொடுக்க நான் வந்துள்ளேன். போலீஸாரிடம் வழங்கிய மனுவை அவர்கள் ஏற்கவில்லை. யுவராஜ் சரணடைந் ததற்கான எந்த அத்தாட்சியும் அவர் கள் வழங்கவில்லை. குறைந்தபட் சம் அவரை பார்க்கக்கூட அனு மதிக்கவில்லை. நீ்திமன்றத்தை அணுகி உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று அவர் கூறினார்.
‘வாட்ஸ்அப்’பில் மீண்டும் பரபரப்பு
நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் யுவராஜ் சரணடைந்ததையடுத்து, விசாரணைக்காக அவரை போலீஸார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் தரையில் அமர்ந்தபடி, அவர் அருகே போலீஸார் நின்றபடி இருக்கும் சில படங்கள் வாட்ஸ்அப் மூலம் வெளியானது.
இந்தப் படங்கள் எப்படி வெளியானது என்பது தெரியாமல் சிபிசிஐடி போலீஸார் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர். மேலும் இதுகுறித்து சிபிசிஐடி அலுவலகத்தில் உள்ளவர்களிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யுவராஜ் சரண் அடைந்தது குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டனர்.