தமிழகம்

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு இன்று கலந்தாய்வு

செய்திப்பிரிவு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முது நிலை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறு கிறது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிபவர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் மாநிலம் முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள் கிறார்கள். இந்த கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப் படும். ஒவ்வொரு மாவட்டத் திலும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடத்தப் படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT