சிவகங்கையில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி வருகைக்காக அமைக்கப்பட்ட தார்ச்சாலை 2 நாட்களில் சேதமடைந்தது.
கரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்வதற்காகவும், வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைக்கவும் டிச.4-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி சிவகங்கை வந்தார்.
அவர் வந்ததையொட்டி பல்வேறு துறைகள் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் சிவகங்கை நகர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ரூ.பல லட்சத்தில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆனால் அச்சாலை 2 நாட்களில் முற்றிலும் சேதமடைந்து ஜல்லிக் கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன.
இதனால் நடந்து செல்வோர் சிரமப்படுகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.
தரமின்றி சாலை அமைத்தோர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஜல்லிக் கற்களை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.