ஆலத்தூர் கிராமத்தில் குளத்தில் குளித்த மூன்று சிறுமிகள் தண்ணீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம், கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொதுக்குளம் ஒன்று அமைந்துள்ளது. இக்குளத்தில், அதேபகுதியைச் சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் மகள்கள் ராகினி (6), ரம்யா (4), விஜயகுமார் என்பவரின் மகள் சாதனா (5) ஆகிய மூன்று சிறுமிகளும், இன்று வீட்டின் அருகேயுள்ள குளத்தில் குளிக்க முயன்றபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால், நீச்சல் தெரியாமல் தண்ணீரில் முழ்கினர்.
சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், குளத்தில் இறங்கி மூன்று சிறுமிகளையும் மீட்டுத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, திருப்போரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராம குளத்தில் முழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.