மருத்துவம், பொறியியல் உள் ளிட்ட தொழில் படிப்புகளுக்கு மீண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற எம்சிஐ பரிந்து ரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மருத்துவம், பொறியியல் உள் ளிட்ட தொழில் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது. ஆனால். மீண்டும் பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது சமூக நீதியை பலவீனப்படுத்தும் முயற்சி யாகும்.
மீண்டும் நுழைவுத் தேர்வு நடத் தினால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் படுவர். எனவே, நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற பரிந் துரையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். இல்லையெனில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறு பான்மையின மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக் கும். அரசியல் ரீதியாகவும் இதற் கான விலையை கொடுக்க வேண்டி யிருக்கும். மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த முயற்சித்தால் இந்தியா வுக்கே வழிகாட்டும் வகையில் மக்களைத் திரட்டி திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்.