மனவளர்ச்சி குன்றிய மகன் மகளுடன் ஆறுமுகம்- முத்துலட்சுமி தம்பதியினர். 
தமிழகம்

திண்டிவனம் அருகே ‘நிவர்' புயலால் வீடிழந்தவருக்கு வீடு கட்ட உத்தரவு

செய்திப்பிரிவு

திண்டிவனம் அருகே வீடுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்- முத்துலட்சுமி தம்பதியினருக்கு மனவளர்ச்சி குன்றிய மகன் வீரப்பன் (40), மகள் காஞ்சனா (35) ஆகிய இருவர் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பாக ஒருவர் வீட்டில் இருக்கவேண்டிய சூழல். ஒருவர் மட்டுமே கூலி வேலைக்கு செல்ல முடியும்.

இந்நிலையில் கடந்த வாரம் ‘புரெவி' புயல் தாக்கத்தால் இவர்களின் வீடு முற்றிலும் சிதிலமடைந்தது. இதனால் இவர்கள் தங்கள் மகன், மகளுடன் அருகாமை வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். இவர்களுக்கு வீட்டை சீரமைக்க நிதிவசதி இல்லை என சமூக வலைதளங்களில் இத்தகவல் வெளியானது. இத்தகவல் அறிந்த விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மகேந்திரன், உடனடியாக மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து ஆறுமுகத்திற்கு வீடு கட்டும் ஆணை வழங்க திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT