வானூர் அருகே ஆரோவில் பகுதியில் வசித்து வருபவர்கள் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் யான்லூசி (40), ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அரோர்மொபைலட் (38).
இருவருக்கும் அருகில் உள்ள கொடூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் இந்து முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க, தாலி கட்டி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, மெட்டிஅணிவித்து நேற்று காலை திரு மணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறு சுவை உணவும் வழங்கப்பட்டது.