சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் காலண்டர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். (உள்படம்) ஜெயசங்கர் 
தமிழகம்

கரோனா பரவல், தொடர் மழையால் சிவகாசியில் காலண்டர் உற்பத்தி பாதிப்பு

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல், தொடர் மழை காரணமாக சிவகாசியில் காலண்டர் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது.

பட்டாசுத் தொழிலுக்கு அடுத்ததாக அச்சுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது சிவகாசி. இங்குகாலண்டர் உற்பத்தியும் குறிப்பிடத் தக்கது. இத்தொழிலில் 500-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் ஈடுபட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் சிவகாசி காலண்டர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆனால் கரோனா அச் சுறுத்தல், பொதுமுடக்கம் ஆகிய காரணங்களால் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு காலண்டர் ஆல்பம் தாமதமாக வெளியிடப்பட்டது. மேலும் உற்பத்தியும் கால தாமதமாகவே தொடங்கப் பட்டது. அண்மையில் பெய்து வரும் தொடர் மழையாலும் இத்தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் கள் சங்க மாநிலச் செயலர் கே.ஜெயசங்கர் கூறியதாவது: கரோனா ஊரடங்கு காரணமாக காலண்டர் தயாரிப்பில் 30 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மில் போர்டு, பாலி போர்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காகித உற்பத்தி குறைந்ததாலும், ரியல் ஆர்ட் மற்றும் குரோமோ ஆர்ட் பேப்பர்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணங்களாலும், லேமினேஷன் பிலிம் 60 சதவீதம் விலை உயர்வு எனப் பல்வேறு நிலைகளில் இத்தொழில் பாதிக்கப் பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT