ஸ்டாலின் உட்பட திமுக தலைவர் களின் சொத்துப் பட்டியலை தயார் செய்து வருகிறோம் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரி வித்தார்.
சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் அதிமுக நிர் வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருணாநிதியின் மறைவுக்குப் பின் அவரை நான் ஒருபோதும் தரக்குறைவாக இதுவரை பேசியது கிடையாது. ஸ்டாலின், ஆ.ராசாதான் எங்கள் தலை வர்களை ஒருமையில் பேசி வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.
திமுகவினரின் மிரட்டல்களுக்கு எல்லாம் அதிமுககாரன் பயப் படமாட்டான். திமுகவுக்கு சகுனம் சரியில்லை. நாங்கள் பின்விளைவுகள், முன்விளைவுகள் எல்லாவற்றையும் பார்த்து கடந்து வந்தவர்கள். எங்களது முதல்வரை யார் தவறாகப் பேசினாலும் எந்த விளைவையும் சந்திக்கத் தயாராகத்தான் உள்ளோம்.
ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்களின் சொத்துப் பட்டி யலை தற்போது தயார் செய்து வருகிறோம். முதல்வரை இனிமேல் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் அவமரியாதையாகப் பேசினால் நான் பதிலடி கொடுப் பேன், என்று கூறினார்.