காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களை எம்எல்ஏ முருகுமாறன் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை வாங்கினார்.
புரெவி புயல் காராணமாகக் கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனார் தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட எள்ளேரி, சாட்டை மேடு, வீரநத்தம், பெரியவட்டம்,கீழ வன்னியூர், குமராட்சி ஆகிய கிராமங்களுக்கு கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளை இன்று (டிச.7) காலை காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை உறுப்பினர் முருகுமாறன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிஸ்கட், பிரெட் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார். தொடர்ந்து வீரநத்தம் கிராமப் பள்ளியில் பொதுமக்களுக்கு சமைக்கப்படும் உணவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதி பாலசந்தர், நெடும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவர் சுவாமி நாத சிவப்பிரகாசம், ஆவின் மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கருணா, குமராட்சி ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் இளஞ்செழியன், அத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்குமார், குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.