கடலூர் மாவட்டத்தில் குடியிருப்புகளில் புகுந்த மழை தண்ணீர் வடியாதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
படகில் உணவு எடுத்து செல்லப்பட்டு வழக்கப்படுகிறது. புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்தது. இதனால் மழை தண்ணீர் சாலைகளில் ஆறு போல பெருக்கொடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மழை தண்ணீர் புகுந்தது. விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், கீழவன்னியூர், அத்திப்பட்டு, வடக்குமாங்குடி, எடையார், கீழக்கரை,நடுத்திட்டு, எள்ளேரி கிழக்கு,குமராட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், சிதம்பரம் பகுதியில் சிதம்பரத்தை சுற்றியுள்ள அனைத்து நகர்கள், ஓமக்குளம்,விபிஷ்ணபுரம், துணிசிரமேடு, வேளக்குடி, தில்லைநாயகபுரம், கிள்ளை,பள்ளிப்படை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களும், குறிஞ்சிப்பாடி பகுதியில் கல்குணம், ஓணான்குப்பம், கொளக்குடி, ஆடுர் அகரம், பூவாணிக்கும், தானூர், மேட்டுப்பாளையம், ஆலபாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களும், கடலூர் பகுதியில் கடலூரை சுற்றியுள்ள அனைத்து நகர் பகுதிகளும், ஈச்சங்காடு, சிப்காட் பகுதி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தண்ணீர் வடியாததால் குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு கிராமங்களுக்கு படகு மூலம் உணவு எடுத்து சென்று வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேல் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழவன்னியூரி கிராமம் முழுவதும் வீராணம் ஏரி தண்ணீர் சூழ்ந்தால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியவில்லை. இதனையொடுத்து ஊராட்சிமன்ற தலைவர் தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் படகில் உணவு உள்ளிட்ட பொருள்களை எடுத்து சென்று வாங்கி வருகின்றனர். இதுபோல மழை தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் ஊராட்சி நிர்வாகமும், வருவாய்த்துறையினரும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.