கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (டிச. 05) வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 920 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 21 லட்சத்து 12 ஆயிரத்து 345 தனிநபர்களுக்கு கரோனா பரிசோதன செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 10 ஆயிரத்து 882 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 லட்சத்து 66 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 777 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸின் ஊடகத்துறை தலைவர் ஆ.கோபண்ணா இன்று (டிச. 06) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இன்று காலை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT