கொடைக்கானல் - பழநி சாலையில் ஏற்பட்ட மண் சரிவு. 
தமிழகம்

கொடைக்கானலில் மீண்டும் மண் சரிவு: பழநி மலைச்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதி களில் தொடரும் மழையால் கொடைக்கானலில் இருந்து பழநி செல்லும் சாலையில் நேற்று மண் சரிவு ஏற்பட்டதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப் பகு தியில் சில நாட்களாக புரெவி புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் கோம்பைக் காடு, புல்லூர் எஸ்டேட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. சாலையில் மண் குவியல்களை உடனுக்குடன் நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி சாலையை சீராக்கினர்.

தடுப்புச் சுவர் சரிந்த இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கினர். முன்னதாக போக்கு வரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சாலை கள் சீரமைப்புக்குப் பிறகு நேற்று முன்தினம் மாலை முதல் கொடைக்கானல் செல்ல வாகனங்களுக்கு அனுமதி அளிக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று அதி காலை பெருமாள்மலையில் இருந்து பழநி செல்லும் மலைச் சாலையில் ஏலக்காய் பிரிவு அருகே மண் சரிவு ஏற்பட்டதில் சாலை துண்டிக்கப்பட்டது.

இதனால் பழநி சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை பட்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடு பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று மாலையில் போக்குவரத்து சீரானது. மழைக் காலம் முடியும் வரை பழநி மலைச்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு தொடரும் என்பதால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சரிவு ஏற்பட்டால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மழைக் காலம் முடியும் வரை பழநி செல்லும் மலைச்சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாகக் கண் காணிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT