வீட்டு வேலைக்காக சவுதி சென்ற பெண்ணின் கையை துண்டித்த செயல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அந்தப் பெண்ணை விரைவில் நாடு திரும்ப ஏற்பாடு செய்ய வலியுறுத்துவதற்காக, அவரது உறவினர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடிதாலுகா, விண்ணம்பள்ளியை அடுத்த மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்த வர் கஸ்தூரி முனிரத்தினம் (56). இவர் கடந்த ஜூலை மாதம் வீட்டுவேலைக்காக சவுதி அரேபியாவுக் குச் சென்றார். அங்கு வீட்டின் உரிமையாளர் இவருக்கு உணவு வழங்காமலும், அதிக வேலை கொடுத்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கஸ்தூரியின்வலது கையை வீட்டின் உரிமை யாளர் வெட்டியதால் அவர் ரியாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஸ் தூரி மகன் மோகன் மற்றும் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.
இதைகேட்டு அதிர்ச்சியடைந்த கஸ்தூரி குடும்பத்தார், அவரை உடனடியாக நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உயர் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர். இதற்கிடையே, வேலைக்காக சவுதி சென்ற தமிழகபெண் கஸ்தூரியை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு திமுக எம்பி கனிமொழி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் கஸ்தூரியை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மகன் மோகன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க நேற்று சென்னை சென்றார். இது குறித்து ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது:
சவுதிக்கு வேலைக்குச் சென்ற என் தாயாருக்கு சரியான உணவு வழங்கவில்லை. தகவலறிந்த இந்திய தூதர அதிகாரிகள் மற் றும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திர
மடைந்த அந்த வீட்டின் உரிமை யாளர், என் தாயாரின் கையை வெட்டியுள்ளார். அவரை மீட்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க சென்னை வந்தோம். முதல்வரை சந்திக்க முடியவில்லை. நாளை (இன்று) சந்தித்து மனு அளிக்க முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.