முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி இருந்ததில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எம்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, எனது தந்தை மறைந்த முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இது முற்றிலும் தவறான தகவல். அதுபோன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.